திருப்பணி

ரூ.4 கோடி மதிப்பில் நடந்து வரும் சென்னிமலை முருகன் கோவில் திருப்பணி அடுத்தஆண்டு முடியும்


ஈரோடு மாவட்டத்தில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றுசென்னிமலை முருகன் கோவில். இந்தகோவிலில் ரூ.4 கோடி மதிப்பில் திருப்பணிகள் வேமாக நடந்து வருகிறது. மார்கண்டேஸ்வரர், உபய வல்லிகோவில், சண்டிகேஸ் வரர்,நவக்கிரகம், பைரவர், சூரியன், சந்திரன், மூல விநாயகர் சன்னதிகள் புதுப்பிக்கப்படுகிறது. தற்போது ராஜகோபுரம் கட்டிமுடிக்கப்பட்டு அதில் வண்ண மயமான சிற்ப வேலைகள் நடந்து வருகிறது. மேலும் பக்தர்களின் வசதிக்காக குடிநீர், கழிப்பிட வசதி மற்றும் அனைத்து வாகனங்களும் நிறுத்த ஏதுவான இடவசதிகள் செய்யப்படுகிறது. கோவிலுக்கு தினமும் வரும் பக்தர்கள் நடந்துவரும் திருப்பணிகளை பார்த்து செல்கிறார்கள். ரூ. 4 கோடி மதிப்பில் நடந்து வரும் இந்த திருப்பணிகள் அடுத்த ஆண்டு முடிவடைகிறது. புதுப்பொலிவுடன் திகழ கூடிய சென்னிமலை முருகன் கோவிலில் திருப்பணிகள் முடிந்த கையோடு கும்பாபிஷேகமும் சிறப்பாக நடக்க இருக்கிறது.


திருப்பணிக்காக தன்னை அர்பணித்து கொண்ட அய்யா திரு கனகசபாபதி அவர்களுக்கு இறைவனின் ஆசி கிடைக்க வாழ்த்துக்கள்


திருப்ப‌னிக்கு ந‌ன்கொடை வ‌ழங்குப‌வர்கள் கீழ்கண்ட‌ முக‌வ‌ரிக்கு தொட‌ர்பு கொள்க‌


Executive Officer
Arulmigu Subramanya Swamy Temple,
Chennimalai,
Perundurai Taluk,
Erode District,
Ph: (04294) 250263, 250223.
E-mail: chenkovil@sancharnet.in
ICICI Bank A/C.No:606201079479


திருப்ப‌னி